தமிழக செய்திகள்

சேலம் மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் நியமனம்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமைச் செயலாளர் உட்பட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது

தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன், டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா, சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ், சேலம் ஆட்சியராக இளம்பகவத், கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி, தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.