தமிழக செய்திகள்

இது குதிரை பேரம் என்றால்.. அப்போ ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் தி.மு.க.-வில் இணைந்தது..?- ஆதவ் அர்ஜூனா கேள்வி

சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு சபரீசன், உதயநிதி ஆகியோர் தான் காரணம்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் தோற்றதில் இருந்து ஏன் தோற்றோம் என்று தெரியாமல் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

சமூக வலைத்தளங்களால் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாக மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் கூறுகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு சபரீசன், உதயநிதி ஆகியோர் தான் காரணம்.

கடந்த திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறந்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆட்சியமைப்பதற்காக திமுக, அதிமுக, பாஜக கைகோர்க்க முயன்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது பற்றி ஏன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கிறார்?

திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் சதியை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடித்தோம்.

திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதா கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டின.

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் தான் சி.வி.சண்முகம் அணி வெளியே வந்தது.

வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வராக நினைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் முயற்சியை திமுக கைவிட்டது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக குதிரை பேரம் நடத்தியதாக கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வது, வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா?

3ல் 2 பங்கு எம்எல்ஏக்களை உடைத்து கட்சியில் சேர்த்தால்தான் அது குதிரை பேரம்.

3 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டு மரியாதை நிமித்தமாக என்னையும், முதல்வரையும் சந்தித்தனர்.

தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் தான் 3 பேரும் எங்கள் கட்சியில் சேர்ந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3 பேரும் தவெகவில் இணைந்ததில் எவ்வித ஜனநாயக மீறலும் இல்லை.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லை.

அதிமுக தொண்டர்களை தமிழக வெற்றிக் கழகம் எப்போதுமே வரவேற்கும்.

ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் தவெக உறுப்பினர் அட்டை என வெளியானது போலியானது.

அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை புதிய அதிமுகவாக பார்க்கின்றனர். அதிமுகவினரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.

3 பேரும் இணைந்திருப்பது கட்சித் தாவல் அல்ல. அன்பாக கட்சியில் இணைவது.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தான் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.