தமிழக செய்திகள்

ஊழல் நடந்திருந்தால் சட்டப்படி தண்டிக்க வேண்டும்; பரிகாரம் கூறுவது ஜோதிடர்களின் வேலை - நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த சு. வெங்கடேசன்!

சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்.

எழுத்தாளர் பி.சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ பாகம் 16 புத்தக வெளியீட்டு விழா இந்த வாரம் நடைபெற்றது.

இந்த புத்தக விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘புத்தக கொள்முதல் ஊழல் பாவம் ஒழிய வேண்டுமெனில், இந்த மகா பெரியவா புத்தகத்தை அந்நூலகத்தில் உள்ள அனைத்து அலமாரிகளிலும் வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாவம் போகும் என மனதார நான் நம்புகிறேன்.” என கோவை பெரியார் அறிவுலக சர்ச்சையை ஒப்பிட்டுப் பேசினார்.

இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

“பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை.

சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT