தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு!

பேரூராட்சிகள் இயக்குநராக கே.எம். சரயு ஐஏஎஸ் நியமனம்.

தமிழ்நாட்டில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சரயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக இருந்த பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT