தமிழக செய்திகள்

அய்யா பழ.நெடுமாறன் விரைந்து நலம் பெற விழைகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அய்யா அவர்களை இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினர் இருந்தனர்.

அதன் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.

POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.

அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

SCROLL FOR NEXT