தமிழக செய்திகள்

ரஜினிகாந்திற்கும், எனக்குமானது போட்டி தானே தவிர பொறாமை அல்ல- கமல்ஹாசன்

புதியவர்களை குறைத்தும் மதிப்பிடக்கூடாது, அதிமுகவும் எதிர்பார்க்கக்கூடாது.

ரஜினிகாந்திற்கும், எனக்குமானது போட்டி தானே தவிர பொறாமை அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ரஜினி கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்ட கேள்விக்கு," கமல்ஹாசன் முதல்வராக இருந்தால் என சிரித்த முகத்துடன் தான் சொன்னார்" என்றார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-

சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை வந்துள்ளேன்

மதுரைக்கு எப்போது வந்தாலும் அன்பு சூழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்கள்தான் விஜய்க்கு வாக்களித்தார்கள். அவர்கள்தான் ஆட்சியை கண்காணிக்க வேண்டும். நாங்களும் கண்காணிப்போம்.

முதலமைச்சர் விஜயின் ஆட்சிக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.

புதியவர்களை குறைத்தும் மதிப்பிடக்கூடாது, அதிமுகவும் எதிர்பார்க்கக்கூடாது.

ரஜினிகாந்திற்கும், எனக்குமானது போட்டி தானே தவிர பொறாமை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.