தமிழக செய்திகள்

‘தறுதலைகளின் வேலையா, தற்குறிகளின் வேலையா தெரியவில்லை’ - கார் கண்ணாடி உடைப்பால் ஆவேசமான ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சமீப நாட்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்த், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கார் கண்ணாடி உடைந்துள்ளது காட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த கட்சித் தொண்டர்கள் காரணமாக இருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர். மேலும் உங்கள் கருத்தியல் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருங்கள் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT