தமிழக செய்திகள்

அ.தி.மு.க.-வினருக்கு ஆஃபர் கொடுத்து அழைக்கவில்லை..!- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

மாற்று கட்சியினர் எடுக்கும் முடிவை திமுக எப்படி கேள்வி கேட்க முடியும்.

அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.

எங்கு உண்மை இருக்கிறதோ அங்குதான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருப்பார்கள்.

மாற்று கட்சியினர் எடுக்கும் முடிவை திமுக எப்படி கேள்வி கேட்க முடியும்.

திமுக காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை ஒழித்துள்ளோம்.

திமுகவின் பண்ணையார் மனநிலை தான் அவர்களின் தோல்விக்கு காரணம்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்விகளை சந்தித்தது.

திமுக- அதிமுக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் முடிவை ஏற்காததால் அதிமுகவினர் தவெக நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள்; அதிமுகவினருக்கு ஆஃபர் எதுவும் கொடுத்து அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.