தமிழக செய்திகள்

நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை..!- தமிழிசை சவுந்தரராஜன்

எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

‘தமிழிசையை தோற்கடித்து மீண்டும் கவர்னராக்க செய்வோம்' என்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இவரது கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் வேட்பாளருமான தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை, அப்படி செய்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும்.

அடிப்படையாக கட்சியில் சேர்ந்து உறுப்பினராகி, மாநில தலைவராகி, ஆளுநராக இருந்துள்ளேன்.

இது சுலபமான காரியமில்லை. எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.