கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து பூதாகரமாகும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தவெக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய்யும் மௌனம் சாதித்து வருகிறார்.
தவெகவினர் இச்சம்பவம் ஒரு திரிக்கப்பட்டது என கூறுகின்றனர். அப்படியானால் இதற்கு கண்டனம் தெரிவித்து செய்திகளை வெளியிடும் அரசியல் தலைவர்களை எதிர்த்தாவது தவெக தலைமை செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், தவெக தரப்பிலும், அரசு தரப்பிலும் இது வதந்தி என்றும் சொல்லப்படவில்லை.
மாறாக அருள் விக்னேஷ் அப்படி செய்திருக்கமாட்டார் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக தவெக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எல்லாம் அவர் அப்பாவி, இது திமுகவின் வதந்தி எனக் கூறுகின்றனர்.
அப்படி வதந்தியாயின் இவ்வளவு பெரிய உணர்ச்சிமிக்க விஷயத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தெரியவில்லை.
இந்நிலையில், அருள்விக்னேஷ் இத்தவறை செய்திருக்காலம் என தவெக கொள்கை பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தே தெரிவித்திருக்கிறார். சமீபத்திய யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்.,
“அவர் இந்த செயலை செய்திருப்பார் என நம்புகிறேன். இல்லையென்றால், இவ்வளவு பூதாகரமாக இந்த செய்தி வராது. ஒரு குற்றவாளி தப்பிக்கும் போராட்டத்தில்தான் அவர் இருப்பார்.
பெண் மாவட்ட ஆட்சியரின் கணவர், தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாக தகவல் வருகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, அடித்தட்டு மக்களுக்கு எப்படி இருக்கும்? என்ற கேள்வி வந்துவிட்டது. அதற்கான பதிலை தலைவர்தான் சொல்லவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.