தமிழக செய்திகள்

எனது மகன் அமைச்சரானதில் பெரும் மகிழ்ச்சி- முன்னாள் சபாநாயகர் தனபால்

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆவார்.

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் புதிய அமைச்சர்கள் 23 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதில், தவெகவில் இணைந்து ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றார். இவர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆவார்.

இந்நிலையில், மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அமைச்சரானது பெருமகிழ்ச்சி என முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்தார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில்,"எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் எனக்கு வாய்ப்பு வழங்கியதைப்போல் எனது மகனுக்கு முதல்வர் விஜய் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

முதல்வர் விஜய் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், அதிமுகவில் தற்போது 2 தரப்புகளாகப் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக முன்னாள் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.