முதலமைச்சர் விஜய்
தமிழக செய்திகள்

தமிழ்நாடு எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் எவ்வளவு?

உதவியாளர் படி என புதிதாக 25 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கார் வழங்கப்படும். வாகனப்படி 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உதவியாளர்படி 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அடிப்படை சம்பளம்

அதன்படி ஒரு எம்.எல்.ஏ. இதற்கு முன்னதாக அடிப்படை சம்பளம் மற்றும் படிகள் மூலமாக 1.05 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றனர். தற்போது அது 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அடிப்படை ஊதியம் முன்னதாக 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது அது 30 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.

மாதாந்திரப்படி 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போதும் அது 10 ஆயிரமாக உள்ளது. தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அது அப்படியே உள்ளது, அஞ்சல் படி 2500 ரூபாய், தொலைபேசிப்படி 7500 ரூபாய், தொகுப்புப்படி 5 ஆயிரம் ரூபாய் என இருந்தது. தற்போதும் அதுவே நீடிக்கிறது.

கார் மற்றும் உதவியாளர் படி

தற்போது வாகனப்படி 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உதவியாளர் படி 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. அத்துடன் காரும் வழங்கப்படுகிறது.

ஒரு தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 3.54 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.