தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

கைரேகைகளை பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கை ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

சேலம் அம்மாப்பேட்டை சக்திநகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது மனைவி தேவபிரசன்னா (39) மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 17-ந் தேதி கேரளாவுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

நகை கொள்ளை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதற்கிடையே அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கை ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT