தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பங்காரப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 32), கூலி தொழிலாளி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் ருக்குமணி (28) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு நைனா (8) என்ற மகள் இருக்கிறாள்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி குமார் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி ருக்குமணி அந்த பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ருக்குமணி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வந்ததுடன், குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளார். இதனால் ருக்கும்ணியின் நடத்தையில் குமார் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு ருக்குமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது தலையின் பின்பக்கத்தில் கொடுவாளால் குமார் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மூளை சிதறி ருக்குமணி ரத்த வெள்ளத்தில் படுக்கையிலேயே பிணமானார். அதன்பிறகு குமார். கெலமங்கலம் போலீஸ் நிலையம் சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.