தமிழக செய்திகள்

வீடு புகுந்து ஆசிரியையை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை

வீட்டின் பீரோ மற்றும் அறைகளில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஷோபாவின் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

வீடு புகுந்து ஆசிரியையை கட்டிப்போட்டு நகை மற்றம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஷோபா, ஓய்வு பெற்ற ஆசிரியை. கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவியாக வேலைக்கார பெண் ஒருவர் வீட்டிலேயே தங்கி பணியாற்றி வருகிறார். அவர் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு செல்வது வழக்கம்.

கொள்ளை

அதன்படி, நேற்று மாலையும் அவர் ஆலயத்திற்குச் சென்றுள்ளார். அதன்பிறகு ஷோபா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்துள்ளது. அவர்கள், ஷோபாவை மிரட்டியதோடு அவரது வாய், கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி நாற்காலியில் அமர வைத்துள்ளது.

தொடர்ந்து வீட்டின் பீரோ மற்றும் அறைகளில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ஷோபாவின் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். கருவியையும் கழற்றி எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று உள்ளனர்.

​போலீசார் விசாரணை

இதற்கிடையே, ஆலயத்திற்கு சென்றிருந்த வேலைக்கார பெண் வீடு திரும்பியபோது, ஷோபா வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை மீட்டதுடன், இது குறித்து அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், வீட்டைப் பார்வையிட்டு முதற்கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியி ருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் முக்கியச் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், வீட்டின் சூழலை நன்கு அறிந்த நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT