தமிழக செய்திகள்

‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்களை வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்.,

“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.

அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்” என்று எழுதப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.