தமிழக செய்திகள்

'பா.ஜ.க.வில் சேராமல் தி.மு.க.வில் சேர்ந்தது ஓ.பி.எஸ். மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது' - திருமாவளவன்

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சியை ஓ.பி.எஸ். மேற்கொண்டார்.திராவிட பாரம்பரியத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பணியாற்றி வளர்ந்தவர்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். அவர் உடன் அவரது மகன் மற்றும் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் குமார், மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது தொடர்பாக பேசிய திருமாவளவன்,

"ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்தது தி.மு.க.விற்கு மட்டுமல்ல, அதன் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம், அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சியை அவர் மேற்கொண்டார். குறிப்பாக எடப்பாடி உடன் இணைய முயன்றார். பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேராமல் தி.மு.க.வில் சேர்ந்தது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. அவர் திராவிட பாரம்பரியத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பணியாற்றி வளர்ந்தவர்.

அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்கும்வகையில் மீண்டும் தன்னை திராவிட பாசறையில் இணைத்துக்கொண்டது வரவேற்க்கத்தகுந்தது." என தெரிவித்தார். 

SCROLL FOR NEXT