தமிழக செய்திகள்

சென்னையில் இன்று உயர்நிலைப் பள்ளிகள் இயங்கும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும். பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும்.

சென்னையில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT