தமிழக செய்திகள்

பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு - ஐகோர்ட் எச்சரிக்கை

படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில்,

* நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை, படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

* பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம்.

* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.

* சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது.

* படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

* பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.

* மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

* பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

* பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.

* மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.