தமிழக செய்திகள்

கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.

இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை 3 விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT