தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கான ஆணையை பெற்றதும், விஜய்க்கு மினி பாதுகாப்பு கான்வாய் வழங்கப்பட்டது. இன்று காலை நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு சென்றார். 7.15 மணியளவில் கான்வாய் வாகனங்கள் வந்தன.
மற்ற தலைவர்கள் விஜய் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் சற்று ஆலோசனை நடத்தி பிறகு பதவி ஏற்க புறப்படுவார்.
பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் காவல்துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அரசு அதிகாரிகள், த.வெ.க. தலைவர்கள் வந்து வண்ணம் உள்ளனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.