தமிழக செய்திகள்

சென்னையில் விடிய விடிய கனமழை- 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை கொட்டியது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்

தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு இன்று மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டையில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை ஆரஞ்சு அலர்ட்

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை 10 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

மீனவர்களுக்கு தடை

தமிழகத்தில் கனமழை எதிரொலியால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

படகு, மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக கரைகளில் வைக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT