சிவன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி புறநகர் பகுதிகளான புதுக்கோட்டை, கூட்டாம்புளி, முள்ளக்காடு, குலையன்கரிசல் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் 4.30 வரை பரவலான மழை பெய்தது. தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் டி.பி. ரோடு, சன்னதி தெரு, பேருந்து நிலையம், சிவன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.