தமிழக செய்திகள்

தொடர் மழை- சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 3 நாட்களில் 8 அடி உயர்வு

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசனம் நிலவி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி உயர்ந்துள்ளது.

மழை

தேனி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசனம் நிலவி வருகிறது.

சோத்துப்பாறை அணை

மேலும் வறண்டு கிடந்த ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி உயர்ந்துள்ளது.

வைகை அணை

நேற்று முன்தினம் 56 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.12 அடியாக உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 19 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் தேவைக்காக 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 25.42 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 41.96 அடியாக உள்ளது. 239 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1113 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT