தமிழக செய்திகள்

சென்னை: நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் - வானிலை மையம்

சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

மாலை மலர்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.

எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.