சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 670 மோட்டார் பம்ப்புகளும், வெளியில் இருந்து 650 மோட்டார் பம்ப்புகளும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். 38 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 700 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்த 3,690 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் அடையாறு முகத்துவாரத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழை யையொட்டி சென்னையில் உள்ள அனைத்து ஆறுகளில் முகத்துவாரங்கள் தூர்வா ரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
எல்நினோ காரணமாக கனமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கனமழை பாதிப்பு ஏற்பட்டால் 111 சமையல் கூடங்களில் உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் அம்மா உணவகங்களையும், காலை உணவு திட்டத்துக்கு சமையல் செய்யக் கூடிய 44 மையங்களையும் இதற்கு பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம்.
வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க தனியார் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகிறோம். சென்னை செயலி மூலம் இதுவரையில் 3,500 தன்னார்வலர்கள் இணைந்து உள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் அவர்களை பயன்படுத்த தயாராக உள்ளோம். மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முழுமை அடையவில்லை. அங்கு மழை நீர் தேங்கினால் மோட்டார் பம்ப்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 290 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் தண்ணீரை வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பம்ப்புகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 670 மோட்டார் பம்ப்புகளும், வெளியில் இருந்து 650 மோட்டார் பம்ப்புகளும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். 38 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 700 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்த 3,690 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.