தமிழக செய்திகள்

கனமழை - கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்

தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் வருகிற 12-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகள் விடுமுறை

இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.