தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, மதுரை நகரப்பகுதியில் 102.56, சென்னை மீனம்பாக்கத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சியில் 101.3 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.76, நாகை மற்றும் தஞ்சையில் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.