தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி இன்று வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வேலூரில் 105.62, மதுரையில் 104.36, திருத்தணியில் 103.64, சென்னை மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கடலூரில் 101.84, பரங்கிப்பேட்டையில் 101.48, திருச்சி மற்றும் நாகையில் தலா 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.76, பாளையங்கோட்டையில் 100.4, தூத்துக்குடியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில், இன்று வெப்பம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.