தமிழ்நாடு செய்திகள்

இப்பவே கண்ணு கட்டுதே...! தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்

சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மாலை மலர்

தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, ஈரோடு, சேலத்தில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுளளது.

திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி, மதுரையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.