ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக சார்பில் 48 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுக சார்பில் 6 கவுன்சிலர்கள், காங்கிரஸ் சார்பில் 4 கவுன்சிலர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக என 60 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் அதிமுக சார்பில் உறுப்பினர்கள் ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் 43 வது வார்டு கவுன்சிலர் சபுராமாவும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இன்று காலை 11:30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா, சபுராமா ஆகியோர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கமிஷனரை சந்தித்து நாங்கள் இன்று முதல் தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல்படுவோம் என்று கடிதம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் படத்தை வைத்தனர்.
பின்னர் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேயர் அறையில் முதலமைச்சர் விஜய் படத்தை வைக்க உறுப்பினர்கள் ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா, சபுராமா சென்றனர் .