தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலுரில் 104.54 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 104.18, திருத்தணி, மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஈரோடு, கரூர் பரமத்தியில் 101.4 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 101.3 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை நகரில் 101.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.