தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கத்தில் 104.18, கரூர் பரமத்தியில் 103.64, தஞ்சையில் 102.2, சென்னை நுங்கம்பாக்கத்தில் 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டையில் தலா 101.3, நாமக்கல்லில் 100.94, மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.