தமிழக செய்திகள்

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த தலை இல்லாத ஆண் உடல் மீட்பு

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தலை இல்லாமல் உடல் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மக்கள் கூட்டம் நிறைந்த பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பூர் ரெயில் நிலைய 4-வது பிளாட்பார்மில் வெகுநேரமாக கேட்பாரற்று சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை திறந்து பார்த்ததில் 35 வயது மதிக்கத்தக்க தலை இல்லாத நிலையில் ஆண் உடல் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் காணப்படும் இருக்கும் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தலை இல்லாமல் உடல் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.