தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தனது பதவிக்கு பொருத்தமில்லாமல், தனது தகுதியை குறைத்துக் கொண்டு பிதற்றியிருக்கிறார். வீரவசனம் பேசியிருக்கிறார். சட்டசபையில் பதிலுரையின்போது பேசியதையும், திருச்சியில் பேசியதையும் ஒப்பிட்டு பாருங்கள். சட்டமன்றத்திற்குள் ஏன் இயலாமை, சோர்வு. திருச்சியில் ஏன் அந்த வீர வசனம். எழுதி கொடுத்தது யார்?. ஒப்பிட்டு பார்த்தால் அரசியல் அசிங்கம், தந்திரம் எல்லாம் தெரியும்.
த.வெ.க.- திமுக இடையில்தான் போட்டி. மற்றவர்கள் எல்லாம் அல்லு சில்லு என்றாரே. அவர்களது வீட்டுக்கு போய் சால்வை போட்டு எதிர்க்கட்சிகளிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களுடைய வாக்குகளை வாங்கினீர்ளே? அது அல்லு சில்லா, தில்லு முல்லா?.
இவ்வாறு ஆ. ராசா கடுமையாக விமர்சித்தார்.