சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதற்கான முதற்கட்ட அரசாணையும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கான அரசாணை வெளியான நாளிலிருந்தே அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இத்திட்டதிற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவே எடுக்கப்படவில்லை, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே தற்போதைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் விளக்கம் அளித்திருந்தார். இதற்கு கனிமொழி கடும் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.
அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எதற்காக? முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?
என்று கேள்விஎழுப்பியுள்ளார்.