தமிழக செய்திகள்

காங்கிரஸ் வாக்கு வங்கியில்லாத டம்மி பீஸ்கள்தான் எனும் ‘கம்பெனி சீக்ரட்’ டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ? - தயாநிதி மாறன் கேள்வி!

பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?

இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுத்தாக்கலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்குபெறவில்லை. இந்நிலையில் மனுதாரர் பட்டியலில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜய் பங்கு பெறாதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?

சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல…

பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?

காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் ‘கம்பெனி சீக்ரட்’ டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT