Tamil Nadu Hajj Aid: Pilgrims to get additional Rs 10,000 support 
தமிழக செய்திகள்

ஹஜ் புனித யாத்திரை மானியம் ரூ.35,000-ஆக உயர்வு

இதன் மூலம் இஸ்லாமியர்கள் தங்களின் ஹஜ் புனித பயணத்திற்கு முன்பை விட ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கை 2026

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.

ஹஜ் புனித யாத்திரை

இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான மானியம் ரூ.25,000 இல் இருந்து, ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கு முன்பை விட ரூ.10,000 மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை நல அரசு

தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மகளிர் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கபர்ஸ்தான்கள் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி நிது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.