தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 100 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர வாலிபர் கைது

கஞ்சா மூட்டைகளுடன் காத்திருந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து வந்த லாரியில் இருந்து இறங்கி 100 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் காத்திருந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியில் இருந்து இறங்கி 100 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் காத்திருந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் ஆந்திர மாநில அந்தரப்பள்ளியைச்சேர்ந்த இந்திர விஜயகுமார்(28) என்பது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT