தமிழக செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2208 பணியிடங்கள் அதிகரிப்பு

குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

மாலை மலர்

டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.