தமிழக செய்திகள்

குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது - 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டி.என்.பி.எஸ்.சி. நாளை இணை​யதளத்​தில் வெளி​யிடு​கிறது.

நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் உள்ள குரூப்-சி பதவி​களில் அதிக காலி​யிடங்​கள் இருப்​ப​தால் அந்த இடங்​களும் குரூப்-4 தேர்​வின் கீழ் வரு​வ​தால் நாளை வெளி​யிடப்​படும் குரூப்-4 தேர்வு அறிவிக்​கை​யில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்​கள் இடம்​ பெறலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தமிழக அரசின் பல்​வேறு துறை​கள் மற்​றும் அரசு பொதுத்​துறை நிறு​வனங்​களின் பணி​யாளர்​கள் டி.என்.பி.எஸ்.சி. வாயி​லாக தேர்வு செய்​யப்​பட்டு பணி​யமர்த்​தப்​படு​கி​றார்​கள். 2026-ம் ஆண்​டுக்​கான டி.என்.பி.எஸ்.சி. வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்​றுள்ள 6 தேர்​வு​களில் 5 தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்டு 3 தேர்​வு​கள் நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன.

2 தேர்​வு​கள் விரை​வில் நடத்​தப்பட உள்​ளன. கடைசி​யாக இடம்​பெற்​றுள்ள குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பு நாளை (6-ந் தேதி) வெளி​யிடப்​பட்டு தேர்வு டிசம்பர் 20-ந் தேதி நடை​பெறும் எனத் தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

அதன்படி, ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டி.என்.பி.எஸ்.சி. நாளை இணை​யதளத்​தில் வெளி​யிடு​கிறது. பொது​வாக குரூப்-4 தேர்​வில், இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் (கிரேடு-3), கிராம நிர்​வாக அலு​வலர், வரை​வாளர், பில் கலெக்​டர், வனக்​காவலர் உள்​ளிட்ட பதவி​கள் இடம்​பெறும். கடந்த 2024-ம் ஆண்டு முதல் பல்​கலைக்​கழ​கங்​கள், தமிழ்​நாடு மின்​சார வாரி​யம், அரசு போக்​கு​வரத்​துக் கழகம் உள்​ளிட்ட பொதுத்​துறை நிறு​வனங்​களின் குரூப்​-சி நிலை​யி​லான பணி​யிடங்​கள் குரூப்-4 தேர்வு மூல​மாக நிரப்​பப்​பட்டு வருகின்றன.

அதோடு பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்சி ஆகிய நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​பப்​படும் என அண்​மை​யில் அரசாணை வெளி​யிடப்​பட்​டது. எனவே, நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் உள்ள குரூப்-சி பதவி​களில் அதிக காலி​யிடங்​கள் இருப்​ப​தால் அந்த இடங்​களும் குரூப்-4 தேர்வின் கீழ் வரு​வ​தால் நாளை வெளி​யிடப்​படும் குரூப்-4 தேர்வு அறிவிக்​கை​யில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்கள் இடம்​ பெறலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குரூப்-4 தேர்வை பொருத்​தவரை​யில் பெரும்​பாலான பதவி​களுக்கு அடிப்​படை கல்​வித்​தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். ஒருசில பதவி​களுக்கு மட்​டுமே பட்​டப்​படிப்பு கல்​வித்​தகு​தி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் பதவி​களுக்கு அடிப்​படை கல்​வித்​தகு​தி​யுடன் கூடு​தலாக தொழில்​நுட்​பத் தேர்​விலும் தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டியது அவசி​யம்.

குரூப்-4 தேர்​வுக்கான அடிப்படை கல்​வித்​தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் முதுகலை பட்​ட​தா​ரி​களும், பட்ட​தா​ரி​களும்தான் அதிக எண்​ணிக்​கையில் விண்​ணப்​பிக்​கி​றார்கள் என்பது குறிப்​பிடத்​தக்கது. இந்த ஆண்டு குரூப்-4 தேர்​வுக்கு 15 லட்சம் பேர் விண்​ணப்​பிக்​கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT