தமிழக செய்திகள்

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும்காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1270

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ காணலாம். 645 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பின்பு கூடுதலாக, 625 இடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப் 2,2ஏ பதவிகளுக்கான மொத்தம் எண்ணிக்கை என்பது 1270 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT