தமிழக செய்திகள்

அரசு கலைக் கல்லூரிகள் ரேங்க் பட்டியல் 27-ந் தேதி வெளியாகிறது- முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கடந்த 20-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டன.

வருகிற 27-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-வது சுற்று ஜூன் 24 முதல் 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த வருடமும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 எடுத்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட போட்டி அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தேவையின் அடிப்படையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. அதுபோல இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT