தமிழக செய்திகள்

ஆளுநரின் உரை ஆளுங்கட்சிக்கு ஆதரவான உரை..!- பிரேமலதா

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தது ஆளுங்கட்சிக்கு ஆதரவான உரை என தேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கி, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார்.

இந்நிலையில், இன்றைய ஆளுநரின் உரை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலா கூறியதாவது:-

சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தது ஆளுங்கட்சிக்கு ஆதரவான உரை. ஆட்சியாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆளுநர் உரை இருந்தது.

பேரவையில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது. அதில் ஒன்றும் தவறில்லை. சட்டப்பேரவை நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.