17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றியதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னருடம் கூட காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர், உரிய நேரத்தில் கிடைக்க இந்த அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.
மாநிலத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க உரிய திட்டம் அமல்படுத்தப்படும்.
முல்லை பெரியாறு அணைத் திட்டம் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஒன்றாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னும் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது.
முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட கேரள அரசு எடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும்.
தமிழகத்தில் அகழாய்வு நடைபெறும் ஊர்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரம்பரிய சுற்றுலா, சுகாதார சுற்றுலாவை சர்வதேச தரத்திற்கு மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்.
சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும்.
நகர்மயமாக்கலில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக்க நடவடிக்கை.
2031-ல் நகரமயமாதலில் இந்தியாவிற்கு முன்னுதாரண மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து காப்பாற்றப்படும். மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
விளையாட்டு துறையில் தமிழகத்தில் சர்வதேச தரத்திற்கு உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றி தமிழகம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டம் அமல்படுத்தப்படும்.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.