தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் தில்லை நாயகம் (வயது44). இவர் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட தில்லை நாயகம் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.