தமிழக செய்திகள்

31 பேருக்கு அரசுப்பணி ஆணை... யார் யாருக்கு என்ன துறை?

சாந்தி என்பவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டது.

கடந்தாண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் இன்று அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். ஒருவருக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சமும் வழங்கினார்.

இந்நிலையில் அரசுப்பணி பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. காவல், கல்வி, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பணி பெற்றோருக்கான விவரங்களை காணலாம்.

சாந்தி - ரூ.10 லட்சம் மட்டும்.

  • ஆனந்தஜோதி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை (மனைவி, 2 மகள்களை இழந்தவர்)

  • நிவேதா - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை

  • கலைச்செல்வி - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

  • சதீஸ்குமார் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

  • விமல் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

  • சங்கவி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை

  • ரகுநாதன் - இரவுக்காவலர் பணி, மாவட்ட வருவாய் அலகு

  • செல்வராணி - மசால்ஜி, மாவட்ட வருவாய் அலகு

  • திவ்யா - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை

  • கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை