தமிழக செய்திகள்

ஆற்காடு அருகே பரபரப்பு - திடீரென தீப்பிடித்த பயணிகள் பேருந்து

ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு செல்லும் வழியில் திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு செல்லும் வழியில் திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எஞ்சினில் புகை எழுந்தபோது பயணிகளை எச்சரித்து ஓட்டுநர், நடத்துநர் உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கினர்.

பயணிகள் கீழே இறங்கியவுடன் உடனடியாக பேருந்து பற்றி எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.