தங்கம் கடத்தல் 
தமிழக செய்திகள்

அபுதாபியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.2¼ கோடி தங்கம் பறிமுதல் விசாரணை

தங்கம் கடத்தி வந்த ராஜீப் இப்ராம் ஷாவை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட ராஜீப் இப்ராம் ஷாவின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவர் ஏற்கனவே துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் வந்திருப்பது தெரிய வந்தது.

ஐக்கிய அரபு நாட்டில் இருந்து பெருமளவு தங்கம், சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையம்

அப்போது அபுதாபியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

இதில் சோதனைகள் முடிந்து வெளியே வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜீப் இப்ராம் ஷா (42) என்ற பயணியின் மீது சந்தேகம் அடைந்து மீண்டும் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அவருடைய கைப்பையை சோதனை செய்தபோது அதில் கருப்பு கார்பன் பேப்பரால் சுத்தப்பட்ட பார்சல் இருந்து. அதில் சுத்தமான 24 கேரட் தங்க பசை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அந்த பார்சலில் 1.60 கிலோ 24 கேரட் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு, ரூ.2.30 கோடி ஆகும்.

விசாரணை

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த ராஜீப் இப்ராம் ஷாவை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தியாகராய நகரில் உள்ள டி.ஆர்.ஐ. அலுவலகத்திற்கு கொண்டு சென்று தங்கம் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட ராஜீப் இப்ராம் ஷாவின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவர் ஏற்கனவே துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் வந்திருப்பது தெரிய வந்தது.

எனவே இவர், ஏற்கனவே இதேபோல் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT