தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.13,750க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டதுது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று காலை குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று மாலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.13,750க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

1-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400

31-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,360

30-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,160

29-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

28-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

1-04-2026- ஒரு கிராம் ரூ.265

31-03-2026- ஒரு கிராம் ரூ.250

30-03-2026- ஒரு கிராம் ரூ.255

29-03-2026- ஒரு கிராம் ரூ.250

28-03-2026- ஒரு கிராம் ரூ.250

SCROLL FOR NEXT